பள்ளியில் 23 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த ஆசிரியை: அதிர்ச்சி சம்பவம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, April 2, 2019

பள்ளியில் 23 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த ஆசிரியை: அதிர்ச்சி சம்பவம்!

சீனாவில் உள்ள மழலையர் பள்ளியில் 23 குழந்தைகளுக்கு விஷம் கலந்த உணவை கொடுத்த ஆசிரியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹெனான் மாகாணத்தில் ஜியாசோவோ பகுதியில் உள்ள மழலையர் பள்ளியில், கடந்த புதன்கிழமையன்று வழக்கம் போல குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

சாப்பிட்ட அடுத்த சில நிமிடங்களில் குழந்தைகள் பலரும் வயிற்றுவலியுடன், வாந்தி எடுக்க ஆரம்பித்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட 23 குழந்தைகளும் உடனடியாக மீட்கப்பட்டு மத்திய சீனக் குழந்தைகளை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு குழந்தை வயிறுபோக்கால் அவதிப்பட்டு வருவதாகவும், மேலும் 7 குழந்தைகள் கடுமையான அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குழந்தைகள் அனைவருக்கும் அளிக்கப்பட்ட உணவில் நைட்ரேட் ரசாயனப் பொருள் கலக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.


பள்ளி ஆசிரியை ஒருவர் குழந்தைகளுக்கு மதிய உணவாக கஞ்சி அளித்ததும் அவர் உணவில் நைட்ரேட் கலந்துகொடுத்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணை வளையத்தில் உள்ளார்