தன்னை விட 32 வயது மூத்தவரை காதலித்த பெண்: விமர்சனங்களுக்கு மத்தியில் நடந்த திருமணம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, April 2, 2019

தன்னை விட 32 வயது மூத்தவரை காதலித்த பெண்: விமர்சனங்களுக்கு மத்தியில் நடந்த திருமணம்!

இங்கிலாந்தில் தன்னை விட 32 வயது மூத்த நபரை திருமணம் செய்ததால் தான் சந்தித்த சவால்கள் குறித்து தாய் ஒருவர் மனம் திறந்துள்ளார்.

ஆப்பிரிக்காவை சேர்ந்த சாரிட்டி வில்சன் (40) என்பவர் ஒரு கிறிஸ்துவ நிகழ்ச்சிக்காக சென்றிருந்த போது தான், இங்கிலாந்தை சேர்ந்த டேவிட் (72) என்பவரை சந்தித்துள்ளார்.

அடுத்த 3 வாரத்தில் டேவிட் காதலிப்பதாக கூறியுள்ளார். அதன் பின்னர் இருவரும் குடும்பத்தின் அனுமதியுடன் 8 வாரத்தில் திருமணம் செய்துகொண்டனர். ஆனால் இருவருக்கும் இடையில் 32 வயது வித்யாசம் இருந்ததால் பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.


இதுகுறித்து பேசியுள்ள சாரிட்டி, என்னை பிடித்திருப்பதாக டேவிட் கூறிய பொழுது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இருவரும் டேட்டிங் சென்றோம். அந்த சமயம் அவர் மீது காதல் வந்திருப்பதை நானும் உணர்ந்தேன். அவர் அருமையான மனிதர்.

யாரவது ஒருவர் முழங்காலிட்டு என்னிடம் காதலை கூற வேண்டும் என நீண்ட நாட்களாகவே கனவு கண்டேன். அந்த கனவு அப்போது நிறைவேறியது. அவர் என்னிடம் காதலை வெளிப்படுத்தியதும், நான் என்னுடைய பெற்றோரிடம் கூறினேன். அவர்களும் எனக்கு அனுமதி கொடுத்தனர். டேவிட்டின் 'அழகான' ஆளுமை என்னுடைய அம்மாவை வசீகரம் செய்துவிட்டது. ஆனால் என்னுடைய நண்பர்கள், உறவினர்கள் பலரும் வேடிக்கையாக பார்த்தனர். அவர்கள் எங்களுக்கு ஓத்துழைப்பு கொடுக்க மறுத்துவிட்டனர்.


எனக்கு ஷார்ஸ் (12), கிகி (9) என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். உயிரியல் தந்தை யார் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். ஆனால் டேவிட்டை தான் அவர்கள் அப்பா என அழைப்பார்கள். அவரும் அதை பற்றி கவலைப்படுவது இல்லை.

நாங்கள் உணவகத்திற்கோ அல்லது சுற்றுலாவோ சென்றால், அங்கிருப்பவர்கள் எங்களை ஒரு மாதிரி பார்ப்பார்கள். எங்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் வயது வித்யாசத்தை கேட்பார்கள். ஆனால் நான் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன். என்னிடம் அடிக்கடி கேட்டு எனக்கு ஞயாபகப்படுத்துவார்கள்.

என்னுடைய மகள்களையும் ஒரு மாதிரி பார்ப்பார்கள். வயது வித்யாசம் அதிகம் என்பதை விட, நான் கறுப்பினத்தை சேர்ந்தவள் என்பதே அவர்களுக்கு உறுத்தலாக இருக்கும். இதனால் அதிகமான இடங்களில் கடுமையாக விமர்சிக்க பட்டுள்ளேன்.

ஆனால் நாங்கள் அதை பற்றி கவலைப்படுவதில்லை. எங்களுக்கும் நிபந்தனையற்ற அன்பு மற்றும் நம்பிக்கையை தவிர வேறு ஒன்றும் இல்லை. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்