இலங்கையின் தற்கொலைதாரியின் புகைப்படம் வெளியானது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, April 21, 2019

இலங்கையின் தற்கொலைதாரியின் புகைப்படம் வெளியானது!

இன்று காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது.

இரண்டு வெளிநாட்டவர்களும் பலியென தகவல். நீர்கொழும்பு கட்டுவப்பிட்டியில் இடம்பெற்ற தாக்குதல் ஒரு தற்கொலை தாக்குதலாக இருக்கலாமென நம்பப்படுகிறது.

உயிரிழந்த ஒருவரின் தலைப்பகுதியை கண்டுள்ள பொலிஸார் அதுகுறித்து தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பு – நீர்கொழும்பு வைத்தியசாலைகளில் இரத்தம் தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காயமடைந்தவர்கள் உறவினர்கள் திரண்டுள்ளதால் அங்கு பெரும் நெரிசல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

கொழும்பு வெடிப்பில் 24 பேரும் நீர்கொழும்பு வெடிப்பில் 50 பேரும் மட்டக்களப்பில் 25 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல்.
காயமடைந்தோருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது.

ஜனாதிபதி மைத்ரிபால சற்றுமுன் நட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் மக்கள் அமைதியாக இருக்குமாறும் படையினர் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறினார்