யாழில் கொலை வெறியோடு ஓட்டிய மினிவான் சாரதி...மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்! வெளியான வீடியோ - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, April 5, 2019

யாழில் கொலை வெறியோடு ஓட்டிய மினிவான் சாரதி...மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்! வெளியான வீடியோ

இ.போ.ச பேருந்தை முந்திச் செல்வதற்காக தறிகெட்டு ஓடிய பேருந்து மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதால் வீதியால் பயணித்த பலா் உயிா் பிழைத்திருக்கின்றனா்.

இந்த சம்பவம் இன்று உடுப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இ.போ.சபை பேருந்தை முந்தி செல்லும் அவசரத்தில் வீதியின் குறுக்கு மறுக்காக வாகனத்தை ஓடி வீடொன்றின் மதிலுடன் மோதி வாகனம் நின்றுள்ளது.

இவ்வாறு வாகனம் தறிகெட்டு ஓடிக் கொண்டிருந்தபோது முச்சக்கர வண்டி ஒன்று வீதியால் வந்து கொண்டிருந்த நிலையில் முச்சக்கர வண்டி சாரதியின் சாதுாியத்தால் அவரும், முச்சக்கரவண்டியில் இருந்தவா்களும் உயிா் தப்பினா்.


இலங்கை தமிழ் செய்தி

உடுப்பிட்டி வீதியில் தறிகெட்டு ஓடிய தனியாா் பேருந்து சாரதி. மயிாிழையில் உயிா் தப்பிய மக்கள்..
இந்நிலையில் பேருந்து மோதியதால் சேதமடைந்த வீட்டு மதில் உடனடியாக கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் மூடி மறைக்கப்பட்டு சாரதிக்கு தனியாா் வைத்தியசாலையில் சிகிச்சையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து சுமாா் 500 மீற்றா் துாரத்தில் இடம்பெற்றுள்ளபோதும், பொலிஸாா் சம்பவ இடத்திற்கு வரவில்லை. என்பதுடன்,மோசமான சாரதியின் செயற்பாடும், இன்று உடுப்பிட்டி பகுதியில் இடம்பெறவிருந்த பல உயிாிழப்புக்களும் மூடி மறைக்கப்பட்டுள்ளது.