சித்த மருத்துவம் தமிழர்களின் தனிப்பெரும் சொத்து – மருத்துவர் கு.சிவராமன் (Video பிரத்தியேக நேர்காணல்) - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, March 23, 2019

சித்த மருத்துவம் தமிழர்களின் தனிப்பெரும் சொத்து – மருத்துவர் கு.சிவராமன் (Video பிரத்தியேக நேர்காணல்)

விஞ்ஞான வளர்ச்சி உச்சத்தை எட்டியுள்ள இன்றைய காலகட்டத்திலும் நோய்கள் குறைந்த பாடாக இல்லை. ஒரு சில நோய்கள் முற்றாகவே ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில் புதுப்புது நோய்கள் மனிதர்களைப் பாடாய்ப் படுத்தி வருகின்றன. நவீன மருத்துவம் எல்லை கடந்து வளர்ந்து உள்ள போதிலும் நோய்கள் முற்றாகக் குணப்படுத்தப் படுவதாக இல்லை. இந்நிலையில் மக்கள் பாரம்பரிய மருத்துவமுறைகளை நாடுகின்ற போக்கு அதிகரித்து வருகின்றது.
இயற்கை மருத்துவத்தில் ஒரு துறையான சித்த மருத்துவம் தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ முறையாக உள்ளது. இந்தத் துறையில் பாண்டித்தியம் பெற்றவரும், தமிழ்நாட்டின் பிரபல சித்த மருத்துவரும், சென்னை, கோவை ஆகிய நகரங்களில் ஆரோக்கியா மருத்துவ நிலையம் என்ற பெயரில் 4 இடங்களில் மருத்துவமனைகளை நடாத்தி வருபவருமான மருத்துவர் கு.சிவராமன் கதிரவன் உலாவிற்கு வழங்கிய நேர்காணல்.