புலம்பெயர் வாழ்வில் காப்புறுதி என்பது தவிர்க்க முடியாத ஒரு அங்கம். மருத்துவக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, கல்விக் காப்புறுதி என இதில் பல வகைகள் உள்ளன. ஒரு தடவை ஒரு நிறுவனத்தில் காப்புறுதியைச் செய்து விட்டோம். ஆயுள் காலம் வரை அந்த நிறுவனத்துடனேயே இருந்து விடுவோம் என நினைப்பவர்களும் உள்ளனர். மாறாக, எந்த நிறுவனத்தில் கட்டுப்பணம் குறைவாக உள்ளதோ, நன்மைதரும் அம்சங்கள் அதிகமாக உள்ளதோ அந்த நிறுவனத்தை நாடி தமது காப்புறுதியை ஆண்டுதோறும் மாற்றிக் கொள்பவர்களும் உள்ளனர்.
காப்புறுதியைப் பற்றி எமக்கு என்னவெல்லாம் தெரியும்? தெரிய வேண்டிய அனைத்தையும் தெரிந்து கொண்டிருக்கின்றோமா? காப்புறுதி நிறுவனங்களும் முகவர்களும் எம்மிடம் உண்மையாக நடந்து கொள்கிறார்களா? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடை தருகிறார் சுவிஸ் நாட்டில் பல வருடங்களாக காப்புறுதித் துறையில் பணிபுரிந்து வரும் சுவிஸ் இலாப மையத்தின் இயக்குநர் கல்லாறு சதீஸ்