எரிகின்ற உடலங்களும் அழுகின்ற உயிர்களும் “முனை மழுங்கா முள்ளிவாய்க்கால்” (VIDEO) - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, March 16, 2019

எரிகின்ற உடலங்களும் அழுகின்ற உயிர்களும் “முனை மழுங்கா முள்ளிவாய்க்கால்” (VIDEO)

கதிரவனும் குருதியில் குளிக்க
மேகமகள் எரி புகையில் மூச்சுத்திணற
குற்றுயிரும் வெற்றுடலுமாக
எண்ணிக்கையைத்
தாண்டிய
ஈழத்தமிழர்கள்
எட்டுத்திசை நாட்டவனும்
எட்டியும் பார்க்கவில்லை
ஏனென்றும் கேட்கவில்லை
ஏனென்றால்
ஏறுக்குநிகரான
வீரத்தமிழன்
ஈழத்தமிழன் என்றோ
கூக்குரலிட்ட மனிதங்கள்
குரல் கேட்க
எந்தக்கடவுளுக்கும்
காதில்லை
அன்று காட்டேரிகள்
பிணம் புசிக்க
சில
எட்டப்பன்களும்
காரணந்தான
எரிகின்ற உடலங்களும்
அழுகின்ற உயிர்களும்
தேடுகின்ற விழிகளும்
ஏங்குகின்ற உறவுகளும்
எத்தனையோஎத்தனை
தவித்தவாய்க்குத்
தண்ணீர்கொடுக்காத
இனமா
என்னினம்?
இல்லைஇல்லை
தாரைவார்த்துஅல்லவா
தனது மொழியை
கொடுத்தது
தாரைவார்த்தல்லவா தன் தாய்நாட்டை கொடுத்தது
தாரைவார்த்து அல்லவா
நாளும் உயிரைகொடுக்குது
ஆனால்
தாய்ப்பாலுக்கு அழும் குழந்தை
உயிர்பிரிய தவிக்கும் தாகம்
உயிரைத்தக்கவைக்க தடுமாறும்
கொடூரம்
எதுக்குமில்லையே ஒரு வரம்
வரமாக வாழும் என் இனம்
வரம்கேட்டு கெஞ்சுகிறதையா
வளமான தனது தாயகத்துக்காக
வழியற்றுப்போனதையா
வல்லரசுநாடுகளில் வன்மத்தால்
புலம்பெயர்ந்த உறவுகளின்புலம்பல்
ஐரோப்பா முழுதும்
அலைமோத
புரியாத மொழிக்காரனும்
புகைத்த உடலங்களுக்கு பூவைத்து ஒளியேற்றுகிறான்
புதைத்த உடலங்கள்
எரித்த உடலங்கள்
தொலைத்த உறவுகள்
தொலைந்த உறவுகள்
இன்றும் புதிராகவுள்ளது
புலம்பலும் புத்துயிராக வாழ்கிறது!!


-கவிதாயனி.வாணமதி (எழுத்தாளர்)