கதிரவனேவாழீ!
தூயதமிழ்ப் பெயர் கதிரவன்
தூய்மைப் படுத்துபவன் கதிரவன்
கங்குல் கிழிப்பவன் கதிரவன்
எங்கும் ஒளிர்பவன் கதிரவன்!
தூய்மைப் படுத்துபவன் கதிரவன்
கங்குல் கிழிப்பவன் கதிரவன்
எங்கும் ஒளிர்பவன் கதிரவன்!
கோள் மண்டலங்களில் தலையாய
கதிரவன் போலநாள் தோறும்சுற்றிச்
சுழன்றுகுறுகியகாலத்திற்குள்
ஊடகங்களில் தலை நிமிர்ந்த கதிரவனே வாழீ!
கதிரவன் போலநாள் தோறும்சுற்றிச்
சுழன்றுகுறுகியகாலத்திற்குள்
ஊடகங்களில் தலை நிமிர்ந்த கதிரவனே வாழீ!
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை
மலரும் குறிஞ்சியல்ல கதிரவன்
கண்ணிரெண்டினால் காண்கிறோம்நாளொரு
மேனியும் பொழுதொருவண்ணமுமாய்
பூத்துக் குலுங்கும் கதிரவனேவாழீ!
பாதையில் கிடக்கும் நெருஞ்சிகளைஅகற்றி
உபாதையில் மடிந்தோரை உயிர்ப்பிக்கும் சஞ்சீவியாய்
சிரஞ்சீவியாய் வாழீகதிரவனே!
மலரும் குறிஞ்சியல்ல கதிரவன்
கண்ணிரெண்டினால் காண்கிறோம்நாளொரு
மேனியும் பொழுதொருவண்ணமுமாய்
பூத்துக் குலுங்கும் கதிரவனேவாழீ!
பாதையில் கிடக்கும் நெருஞ்சிகளைஅகற்றி
உபாதையில் மடிந்தோரை உயிர்ப்பிக்கும் சஞ்சீவியாய்
சிரஞ்சீவியாய் வாழீகதிரவனே!
கதிரவன் இல்லையேல் இவ்வுலகில் ஏதுமில்லை
உலகத் தமிழர்களின் ஒளிநாதமாய்
திகழ்பவன் கதிரவன்! ஆயகலைகள்
அறுபத்துநான்கினையும் திரட்டிதூயகைகளால்
தாயானவள் ஊட்டிவிடும் அமுதம் போல
அள்ளித் தரும் கதிரவனே நாளை நீ
புகழேட்டின் உச்சத்திலிருப்பாய்!
உலகத் தமிழர்களின் ஒளிநாதமாய்
திகழ்பவன் கதிரவன்! ஆயகலைகள்
அறுபத்துநான்கினையும் திரட்டிதூயகைகளால்
தாயானவள் ஊட்டிவிடும் அமுதம் போல
அள்ளித் தரும் கதிரவனே நாளை நீ
புகழேட்டின் உச்சத்திலிருப்பாய்!
கவிதைத் தோட்டம் உருவாக்கிகவிப்பயிர்
வளர்ப்பவன் நீ! உன்சரிதைபாடாமல் போகுமா
என் கவிதை!கயவர்களைக் கூட ஆன்மீகவழியில்
திருப்பிஅவர்களைத் திருத்தி திருப்தி அடைய
வைத்த கதிரவனே வாழீ!
வளர்ப்பவன் நீ! உன்சரிதைபாடாமல் போகுமா
என் கவிதை!கயவர்களைக் கூட ஆன்மீகவழியில்
திருப்பிஅவர்களைத் திருத்தி திருப்தி அடைய
வைத்த கதிரவனே வாழீ!
பல துன்பத்தில் வாழ்ந்து வரும் புலம்பெயர்
மக்களின் மனதைமயிலிறகால் வருடிபலதும் பத்தும்
அறியவைத்து வயலும் வாழ்வும் போல
வளமாக வாழவைத்த கதிரேநீ
வளம் பொங்கவாழ்த்துகிறேன் உயிரே!
மக்களின் மனதைமயிலிறகால் வருடிபலதும் பத்தும்
அறியவைத்து வயலும் வாழ்வும் போல
வளமாக வாழவைத்த கதிரேநீ
வளம் பொங்கவாழ்த்துகிறேன் உயிரே!
கடலே பொங்கி எழுந்தாலும்உடலே
நொந்துவலித்தாலும் ஊடகனுக்குரிய
துணிசசல்,போராடும் குணம்,கண்முன்னே
நடக்கும் தீங்குகளை உலகெங்கும் சட்டெனக்
காவிச் செல்லும் கதிரவனின் நெருப்புக் கரங்கள்
நொந்துவலித்தாலும் ஊடகனுக்குரிய
துணிசசல்,போராடும் குணம்,கண்முன்னே
நடக்கும் தீங்குகளை உலகெங்கும் சட்டெனக்
காவிச் செல்லும் கதிரவனின் நெருப்புக் கரங்கள்
தீதூய்மையானது அழிக்கவும் வல்லது!
ஆக்கவும் வல்லது! கதியென்றுகதிரவனை
நாடியவர் விதியென்று நொந்ததில்லை!
மக்கள் மனங்களில் பெருவிருப்புடன்
சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கும்
இணைய ஊடகஉலகின் அதிபதியேவாழீ
ஆக்கவும் வல்லது! கதியென்றுகதிரவனை
நாடியவர் விதியென்று நொந்ததில்லை!
மக்கள் மனங்களில் பெருவிருப்புடன்
சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கும்
இணைய ஊடகஉலகின் அதிபதியேவாழீ
பத்தாண்டுகாலம் முத்தாக ஒளிவீசி
ஊடக உலகின் இணையிலாச் சொத்தாக
விளங்கும் கதிரோனே! நின்றுநிலைத்து
நீள்நில மெங்கும்வாசகரின் சுவாசமாய்
கலந்திருக்கும் வாசகமேவாழீ!
இன்றுகதிரவனின் தசாப்தம்! என்றும்
கதிரவன் ஒருசகாப்தம்!
ஊடக உலகின் இணையிலாச் சொத்தாக
விளங்கும் கதிரோனே! நின்றுநிலைத்து
நீள்நில மெங்கும்வாசகரின் சுவாசமாய்
கலந்திருக்கும் வாசகமேவாழீ!
இன்றுகதிரவனின் தசாப்தம்! என்றும்
கதிரவன் ஒருசகாப்தம்!
பிரபஞ்சத்தில் முதன்மையானகதிரவனைப் போல
இணையஉலகில் இன்றுபோல் என்றும்
முதன்மையான கதிரவனாய்த் திகழவேண்டும்
இப்பிரபஞ்சமே உனைவியந்து புகழவேண்டும்!
இணையஉலகில் இன்றுபோல் என்றும்
முதன்மையான கதிரவனாய்த் திகழவேண்டும்
இப்பிரபஞ்சமே உனைவியந்து புகழவேண்டும்!
காலைக் கதிரவன் மேலும் மாலைக்
கதிரவன் மேலும் பல்லாயிரம் கோடி
கண்படும் படட்டும், உன் அறிவொளி
பட்டுச் சுடரட்டும்! வலம் இடம் சாயா
வானத்து நடுநெற்றிப் பொட்டின் கதிரவனாய்
இருக்க வாழ்த்துகிறேன் நீடுவாழீ!
கதிரவன் மேலும் பல்லாயிரம் கோடி
கண்படும் படட்டும், உன் அறிவொளி
பட்டுச் சுடரட்டும்! வலம் இடம் சாயா
வானத்து நடுநெற்றிப் பொட்டின் கதிரவனாய்
இருக்க வாழ்த்துகிறேன் நீடுவாழீ!
காலையில் ஒருமுகம்!கடும் பகலில் ஒருமுகம்!
மாலையில் ஒருமுகம் காட்டுவான் அந்தக் கதிரவன்
அப்பொழுதும் இப்பொழுதும் முப்பொழுதும் இனி
எப்பொழுதும் உண்மையின் முகம் மட்டுமேகாட்டும்
எங்கள் கதிரவனேநீபல்லாண்டுவாழீ
மாலையில் ஒருமுகம் காட்டுவான் அந்தக் கதிரவன்
அப்பொழுதும் இப்பொழுதும் முப்பொழுதும் இனி
எப்பொழுதும் உண்மையின் முகம் மட்டுமேகாட்டும்
எங்கள் கதிரவனேநீபல்லாண்டுவாழீ
-கவிஞர் மதி சுவிஸ் –