கதிரவனே வாழ்த்துக்கள் உனக்கு! சுவிஸ் புங்குடுதீவு சுப்பையா வடிவேல் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, March 14, 2019

கதிரவனே வாழ்த்துக்கள் உனக்கு! சுவிஸ் புங்குடுதீவு சுப்பையா வடிவேல்


உண்மையும் உழைப்புமாய்
வளர்ந்து உயர!
உலகத்தமிழ் மக்கள் இதயங்களில்
ஊன்று கோலாய் பிரகாசித்து!
ஐயமின்றி ஆளுமையின்
பெற்று வளர்ச்சி!
ஏற்றமாய் உலகளவில்
பெற்று எண்ணம்!
எல்லாக் காலங்களிலும்
விஞ்ஞான அறிவோடும் உணர்ச்சி
மிகு தமிழோடும் எழுந்து நட!
மண்மீது மூடிக் கிடக்கும்
தூசுகளைத் துடைத்தெறிய
பிரகாசத்துடன் கதிரவனாய் வா!
குமரியின் இடுப்பில் இருந்து கொண்டு
இமயத்தின் நெற்றியில் வெற்றியை
எழுதிய தமிழினத்தின் வழி
வந்தவனே, வாழ்த்துக்கள் உனக்கு!
உன் செய்தி எழுத்துக்களால் முடியும்
உலகத் தமிழரை ஒன்று சேர்க்க!
தமிழ் சமவெளியின் தங்க சிங்காதனமே
தமிழுக்காய் உழைத்துக் கொண்டே இரு!
வானம், பறவையின் சிறகுகளால்
விடாது கிழிந்து!
ஒரு படகு மிதப்பதற்கும் மூழ்குவதட்கும்
தண்ணீர் காரணம்!
ஒரு பலூன் பறப்பதற்கும் வெடிப்பதற்கும்
காற்று காரணம்!
ஒரு மனிதன் உலக செய்தி அறிவை பெற்று
வாழ்வதற்கு கதிரவன் டொக். கொம்!
உனது ஒன்பதாவது வயதுக்கு எனது
ராசா வாழ்த்துக்கள்!
வாழ்க! வளர்க! உயர்க! என வாழ்த்தும்
 உன் அடியேன் நான் கதிரவனே
அடியேன் கதிரவனே! நிலவை ரசித்தேன், அது தேய்ந்தது
மலரை ரசித்தேன், அது வாடிப் போனது
மேகத்தை ரசித்தேன், அது கலைந்து போனது
அலையை ரசித்தேன், அது திரும்பிப் போனது
கதிரவனை ரசித்தேன், மனது பிரகாசமானது
உன் தேனாக இருக்கும் செய்தி வரிகளினால்
அடியேன் பாலனாக மாறினேன்!
அடியேன் விரும்பும் கதிரவனே!
ஒலிம்பிக் ஜோதி ஏற்றினால் அது உலகைச் சுற்றி வலம் வருகிறது!
என்னுள் ஆன்மிக ஜோதியை ஏற்றினாய்!
கதிரவன் என் இதயம் கடந்து உலகம் சுற்றி வலம் வருகிறார்! நீ
கதிரவனே! காளான்களை வெட்டியெறிய,
கோடரிகளை கொண்டு வருகிற கோமாளி அல்ல!
பெட்டிக்குள்ளே நெருப்பு! கால் நீட்டிக் கிடக்கிற கந்தகம்!
நீ கதிரவனே! காற்றோடு கைகொடுக்கும், கனல் நெருப்பு மட்டுமல்ல!
காற்றுக்கு ஈடு கொடுக்கும், கற்பூர எரி நெருப்பு!
உனது எட்டாவது வயதை தாண்டுகிறாய்
எனது இதய வாழ்த்துக்கள் கதிரவனே!
தமிழர் சம உரிமைக்காக, உனது எழுதுகோலை நீட்டிக்கொண்டே போ,
அருமை கதிரவனே!
கதிரவனே! இதை அறியுரை என்று, நினைத்து அவதிப்படாதே!
அறிவைப் பெறுவதில், பிச்சை பாத்திரமாய் இரு அன்பைக் கொடுப்பதில்,
அட்சையப் பாத்திரமாய் இரு! உன்னை
எனது இதயத்தால் வாழ்த்துகிறேன்!
பல ஆண்டுகளுக்கு நடந்து செல் கதிரவனே!
-சுவிஸ் புங்குடுதீவு சுப்பையா வடிவேல்-