அழுகிறது குழந்தை ; எரிகிறது நெருப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, March 14, 2019

அழுகிறது குழந்தை ; எரிகிறது நெருப்பு


அழுகிறது குழந்தை
எரிகிறது நெருப்பு
கொதிக்கிறது நீர்
சோற்றில் கை வைக்க
சேற்றில் விளைந்த அரிசியினை அழும் குழந்தைக்கு உவர்ந்தளிப்பதாரோ?
நீரினை ஆவியாக்கி
பானையினை வெறுமையாக்கிட
இந்த நெருப்பிற்குத் தான் எத்தனை பிரியம்?
குழந்தையே!
உன் அழுகையினை எப்போது நிறுத்துவாயோ?
உனதுள்ளம் சாந்தியுற
நீ-மனமாற அழு
எனதுள்ளம் சாந்தியுற
நீ-உன் அழுகையினை சிறிது நிறுத்து
குழந்தையே!
உன் கண்ணீர் துளிகள் வலிமையறியாது
நீ-கண்ணீரைச் சிந்துகிறாய்
அறிவாயோ குழந்தையே!
உன் கண்ணீர்
இறைவனின் கோபப் பார்வையினை உலகில் இறக்கிட வல்லது
நீ பசியால் இங்கு அழுகிறாய்
எங்கோ? பாவியாகி சிலர் அழப்போகிறார்கள்
அறிவாயோ குழந்தையே?
வறுமையால் வெறுமையாகி
காய்ந்து கருகிய
உன் முடி அழகினை தானும் பெற்றிட
எத்தனை பேர்?
காசியினை கரியாக்குகிறார்கள்?
உன் வயிறு எத்தனை நாள் புடைக்கும்?
இவனெல்லாம் பாவியல்லாது வேறு யார்?