கதிரவா, அறிவுக்கதிர்தரவா! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, March 14, 2019

கதிரவா, அறிவுக்கதிர்தரவா!


கதிரவா, அறிவுக்கதிர்தரவா!
கதிரவன்
எங்கள் தமிழ் அன்னையின்
அழகிய தமிழ் மகன்
சொல்ல வேண்டியதை நேர்படச்சொல்லும்
இனிய திமிர்மகன்
கதிரவன் பார்வைபட்டால்
மலரும் அந்ததாமரைகள்
கதிரவன் வலைப்பார்வைபட்டால்
மட்டுமே புலரும் எங்கள் நாட்கள்
வலையில் வீழ்ந்தமீன்கள்
வாடிக்கிடக்கும்
எங்கள் கதிரவனின் வலைக்குவந்தால்
மீன்களே பாடிக்கிடக்கும்
ஊடக இலக்கணம் அறிந்த கதிரவன்
ஊரையே நம் கண்ணில் கொண்டுவரும் ஊரவன்
சார்பு நிலை எடுக்காத தூயவன்
சாதிக்கும் வரை ஓயாத அலையவன்
சுருங்க எழுதி விளங்கவைப்பான்
சுவைபடச் சொல்லி குலுங்கவைப்பான்
ஆழமாய்ச் சொல்லி மலைக்கவைப்பான்
அறியாத செய்தியை முந்தித் தந்து திகைக்கவைப்பான்
இணைய உலகில் அவனுக்கு அவனே இணையவன்
இணைந்தவர் இதயத்தில் தமிழ் ரசனை பாய்ச்சும் கணையவன்
இணையற்ற நம்தமிழுக்கு என்றும் நற்துணையவன்
இணையத்தில் உயரட்டும் அவன் புகழ் ஈபில்ரவரதாய்.
இணைய உலகில் கதிரவன் இணையத்தளம் ஈடுஇணையற்று கொடிகட்டிப்பறக்க இந்த அண்ணாவின் ஆசிகளும்வாழ்த்துகளும். கடவுள்அருளால் எல்லா நலன்களையும் பெறவாழ்த்துகிறேன்.
புதிய அகவைக்குள் காலடிவைக்கும் கதிரவன்இணையத்தளம் வளர்ந்து பெருமை பெற எல்லோரும் வாழ்த்துவோம்!
அந்தக்கதிரவனைப் போல் எங்கள் கதிரவனின் தமிழ்ஒளி உலகமெல்லாம் வீசட்டும்!
அன்பும்ஆசிகளுமாய்,
அ.நிமலன்(சுவிஸ்)