தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான ஞா.சிறிநேசன் அவர்கள் பாசல் செந்தமிழ்ச்சோலை உதவி நிறுவனத்தின் மூன்றாவது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சுவிஸ் வந்திருந்தார். கல்வியியலாளரான அவர் தான் போட்டியிட்ட முதலாவது தேர்தலிலேயே அதிகப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர்.
அரசியலில் முதுமானிப் பட்டம் பெற்ற அவரின் அரசியல் ஞானம் அவரது சொல்லிலும் செயலிலும் நிறைந்து இருப்பதைக் கதிரவன் உலாவிற்காக அவர் வழங்கிய சிறப்பு நேர்காணலில் தெளிவாக அவதானிக்க முடிகிறது.