சுவிஸ் நாட்டில் வாழும் வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்ட இரண்டாம் தலைமுறையினரை இலக்கு வைத்து சுவிஸ் மக்கள் கட்சியினால் முன்மொழியப் பட்டுள்ள நாடு கடத்தல் சட்ட மசோதா தொடர்பிலான சர்வசன வாக்கெடுப்பு பெப்ரவரி 28 இல் நடைபெற இருக்கிறது. பெரும்பாலும் வெற்றிபெறக் கூடும் என ஊடகங்களால் கருதப்படும் இந்த வாக்கெடுப்பிற்கு எதிராக இடதுசாரிக் கட்சிகளும், மனித உரிமைப் போராளிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் சுவிஸ் நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியான சோசலிச ஜனநாயகக் கட்சி பாரிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இதன் ஒரு அங்கமாக சமஷ்டி நாடாளுமன்றத்தில் நடாத்தப்பட்ட ஊடகர் சந்திப்பில் கலந்து கொண்ட அக் கட்சியின் வெளிநாட்டவர் இணைவாக்கப் பிரிவின் தூண் நகரப் பிரதிநிதி தர்ஷிகா கிருஸ்ணானந்தம் வடிவேலு, ஓல்ரன் நகரப் பிரதிநிதி சிறி இராசமாணிக்கம் ஆகியோர் கதிரவன் உலாவிற்காக வழங்கிய சிறப்புச் செவ்வி.