மனித நடத்தை உளவியலாலேயே தீர்மானிக்கப்படுகின்றது. குடும்பங்களில் நிலவும் பிரச்சனைகளுக்கு பெரும்பாலும் உளவியலே காரணமாகக் கொள்ளப்படுகின்றது. உடல் நோய்களுக்கு அப்பால் உளத் தாக்கங்களும் நோய்களாக வெளிப்படுகின்றன. எனவே நோய்க்கான மூல காரணத்தைக் கண்டுபிடித்து அதற்கேற்பப் பரிகாரம் செய்யப்பட வேண்டும். அதில் யுத்த மன வடுக்களைத் தாயங்கியவர்களாகப் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் விசேடமாக அணுகப்பட வேண்டும்.
இவ்வாறாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பல விடயங்களுக்கு உளவியல் நோக்கில் பதில் அளிக்கிறார் டென்மார்க் நாட்டில் வாழும் உளவியல் நிபுணர் சிறி கதிர்காமநாதன்.