ஜனநாயகவிரோத சட்டத்திற்கு எதிராக தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் – நிலா மாணிக்கவாசகர் (செவ்வி இணைப்பு) - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, March 23, 2019

ஜனநாயகவிரோத சட்டத்திற்கு எதிராக தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் – நிலா மாணிக்கவாசகர் (செவ்வி இணைப்பு)

பெப்ரவரி 28 ஆம் திகதி சுவிஸ் நாட்டில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ள வெளிநாட்டவர்களுக்கு எதிரான சட்ட முன்மொழிவு ஜனநாயக விரோதமானது. மானுட குலத்திற்கே எதிரானது. ஒரு நாட்டின் மக்களிடையே முரண்பாடுகளைத் தோற்றுவிக்கக் கூடியது. எனவே அந்த வாக்கெடுப்பு தோல்வியுறச் செய்யப்பட வேண்டும் என்பது இடதுசாரிக் கட்சிகளின் கொள்கையாக உள்ளது. அதற்காக அந்தக் கட்சிகள் தொடரச்சியான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றன.
அதன் ஒரு அங்கமாக இளம் தமிழ் அரசியல்வாதியும், பல வருடங்களாக சுவிஸ் சோசலிச ஜனநாயகக் கட்சியின் நீண்டகால உறுப்பினருமான செல்வி நிலா மாணிக்கவாசகர் உத்தேச சட்டமூலத்தின் தீங்கு தொடர்பில் கதிரவன் உலாவிற்காக மனம் திறக்கிறார்