நாங்கள் விருதுகளை இலக்கு வைத்துப் பணியாற்றியவர்கள் அல்ல – மூத்த ஊடகவியலாளர் ஞா. குகநாதன் (பிரத்தியேக நேர்காணல்) - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, March 23, 2019

நாங்கள் விருதுகளை இலக்கு வைத்துப் பணியாற்றியவர்கள் அல்ல – மூத்த ஊடகவியலாளர் ஞா. குகநாதன் (பிரத்தியேக நேர்காணல்)

யாழ் குடாநாட்டின் கிட்டிய வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர் உதயன். யுத்த நெருக்கடியில் யாழ் குடாநாடு சிக்குண்டிருந்த காலகட்டத்தில் பொருளாதாரத் தடைகளையும் சமாளித்து போர்க்கால ஊடகமொன்றின் பணியைச் சிறப்பாக ஆற்றிய இந்தப் பத்திரிகை சந்தித்த துயரங்கள்இ இழப்புக்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இந்தப் பத்திரிகையில் 25 வருடங்கள் செய்தி ஆசிரியராகக் கடமையாற்றியவர் திரு ஞா. குகநாதன்.
அவருடைய ஊடகத்துறை அனுபவமோ அதைப் போல இரண்டு மடங்கு காலம். தமிழ் ஊடகத்துறையில் அதிக காலம் பணியாற்றிய ஒரு ஊடகவியலாளரான அவர் 2011 இல் இனந்தெரியாத (?) நபர்களின் தாக்குதலுக்கு இலக்காகிஇ உயிர்பிழைத்து தற்போது சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வருகின்றார். மூத்த ஊடகவியலாளர் என்ற வரையறைக்குள் உண்மையாகவே அடக்கக் கூடிய ஒரு சிலருள் இடம்பெறும் அவர் கதிரவன் உலாவிற்காக வழங்கிய சிறப்புச் செவ்வி.