தமிழக நவீன அரங்கச் செயற்பாட்டு முன்னோடிகளுள் ஒருவரான பேராசிரியை அ.மங்கை ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக இடைவிடாது குரல்தந்து வரும் ஒருவர். பெண்ணியச் செயற்பாட்டாளாரான அவர் தாய்த் தமிழகத்தில் மட்டுமன்றி தமிழீழத்திலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தனது செயற்பாடுகளை மேற்கொண்டு வருபவர். ஈழ விடுதலை ஆதரவாளரான அவர் போலிகளைத் தேலுரித்துக் காட்டுவதில் என்றும் பின்னிற்பவர் அல்ல. அத்தகைய பண்பினால் சிறந்த நண்பர்களையும் மோசமான எதிரிகளையும் சம்பாதித்துள்ள அவர் கதிரவன் உலாவிற்காக வழங்கிய செவ்வி.
அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள அநேக விடயங்கள் இருந்த போதிலும் குறுகிய நேரத்தில் எங்களால் முடிந்ததை நேயர்களுக்கு வழங்குகின்றோம்.