புறனானூற்று வீரர் தம் ஈகம் மாவீரச்செல்வங்களுக்கான கவிதாஞ்சலி சமர்ப்பணம். (முழு நீளக் காணொளி) - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, March 23, 2019

புறனானூற்று வீரர் தம் ஈகம் மாவீரச்செல்வங்களுக்கான கவிதாஞ்சலி சமர்ப்பணம். (முழு நீளக் காணொளி)

காரிருழ் சூழ்ந்து கார்மேகம் அழுகிறது…அடடா இது புனிதர்களுக்கான மாதம் அல்லவா?
காந்தழ் மலர் முகை அவிழ்க்கும் கார்த்திகையில் எம் மாவீரச்செல்வங்களுக்கான நினைவேந்தல்
வாரம்…எம் தேசத்தின் விடிவுக்காக தம் உயிரை உருக்கி ஒளி கொடுத்த உன்னதமானவர்களைத்
தொழுது சுடரேற்றி வழிபடுவோம் வாருங்கள்.
தேசியப்புதல்வர்களை எழுச்சியோடு போற்றிச் சபதம் எடுக்கும் மனங்களும்
நெஞ்சிலே துயர் தாங்கி அழுது கரையும் உறவுகளும் ஒன்று பட்டு நிற்கவேண்டிய காலத்தின் தேவையை
உணர்த்துகின்ற உணர்வுகளும் ஒன்று சேர்கின்ற இப்புனிதர்களின் வாரத்தில் கற்பூர தீபங்களல்ல காற்றோடு
கரைந்து போக…இவர்கள் கார்த்திகைத்தீபங்கள் என்றே ஒவ்வொரு ஆண்டும் தன் பணியாக கதிரவன்
இணையமாகிய நாம் மாவீரச்செல்வங்களுக்காக கவிதாஞ்சலி சமர்ப்பணம் ஒன்றைப் படையலிடுகிறோம்.
புலத்தில் வாழும் கவிஞர் பெருமக்களின் உணர்வுகளை கவிமழையாக வீரர்களுக்கு அர்ப்பணம் செய்துள்ளார்கள்.
வாருங்கள் கவிப்படையலை அனைவருமாக செவி ஏற்போம்.