ஈழத்துப் பாடகனாக இருப்பதிலேயே நான் பெருமை கொள்கிறேன் – கோகுலன் (சிறப்பு நேர்காணல் இணைப்பு) - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, March 23, 2019

ஈழத்துப் பாடகனாக இருப்பதிலேயே நான் பெருமை கொள்கிறேன் – கோகுலன் (சிறப்பு நேர்காணல் இணைப்பு)


எழுச்சிப் பாடகர் ஜி. சாந்தன் அவர்களை தமிழீழப் போராட்டத்தைப் பற்றித் தெரிந்தவர்கள் அனைவரும் அறிவர். தனது சிம்மக் குரலில் அவர் பாடிய பாடல்கள் இரசனைக்கு உரிதாக மட்டுமன்றி எழுச்சி மிக்கதாகவும் விளங்கின. அனைவரையும் கவலைக்கு ஆளாக்கி விட்டு அண்மையில் எமைவிட்டுப் பிரிந்த அவரின் குரலில் பாடுவதற்கு இன்னுமொருவர் வரமாட்டாரா என்ற ஏக்கத்தைப் போக்க வந்துள்ளார் அவரின் வாரிசு கோகுலன்.
புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்பதை நிரூபிப்பதைப் போன்று தந்தையின் சாயலிலேயே பாடுவதுடன், தந்தையால் கட்டியமைக்கப்பட்ட இசைக்குழுவையும் பெறுப்பேற்று செவ்வனே நடாத்தி வருகிறார். இசை நிகழ்ச்சிக்காக சுவிஸ் நாட்டிற்கு வருகைதந்த அவர் கதிரவன் உலாவிற்கு வழங்கிய செவ்வி.