புதைபட்டு விட்டோமென்று
புலம்பாதே என்நண்பா …
புதைக்காமல் முளைக்கும்விதை
மரமாக மாறாது …
புலம்பாதே என்நண்பா …
புதைக்காமல் முளைக்கும்விதை
மரமாக மாறாது …
அடிமேலே அடியென்று
அலடிக்காதே நீசும்மா …
தானாக சிதையும்கல்
சிலைவடிவம் காணாது …
அலடிக்காதே நீசும்மா …
தானாக சிதையும்கல்
சிலைவடிவம் காணாது …
வெற்றியால் பிறருக்குன்
வீரத்தைக் காட்டலாம் …
தோல்வியால் மட்டும்தான்
உன்திறனைக் கூட்டலாம் …
வீரத்தைக் காட்டலாம் …
தோல்வியால் மட்டும்தான்
உன்திறனைக் கூட்டலாம் …
திறனைநீ கூட்டாமல்
தீர்க்கம்பெற முடியாது …
மூர்க்கத்தோடு முயலாட்டி
முன்னேற்றம் நிலையாது …
தீர்க்கம்பெற முடியாது …
மூர்க்கத்தோடு முயலாட்டி
முன்னேற்றம் நிலையாது …
எதிராளியின் தவறால்கூட
என்றோஒருநாள் வெல்லலாம் …
சும்மாகிடந்த உன்னக்கூட
யோகம்தூக்கிச் செல்லலாம் …
என்றோஒருநாள் வெல்லலாம் …
சும்மாகிடந்த உன்னக்கூட
யோகம்தூக்கிச் செல்லலாம் …
ஆனால்அந்த வெற்றியெல்லாம்
ஆலமரம் இல்லையப்பா …
நேற்றுமுளைத்து இன்றுவாடும்
கோரைப்புல்லு போலதாம்பா …
ஆலமரம் இல்லையப்பா …
நேற்றுமுளைத்து இன்றுவாடும்
கோரைப்புல்லு போலதாம்பா …
போராடு தோற்றாலும்
போராளி பட்டம்கிட்டும் …
சாகும்வரை தோற்றாலும்
சரித்திரம்உன் பெயரைவெட்டும் …
போராளி பட்டம்கிட்டும் …
சாகும்வரை தோற்றாலும்
சரித்திரம்உன் பெயரைவெட்டும் …
என்றும் எழுத்தாணி முனையில் …