பிரசாரத்தின் போது கைகுலுக்கிய சர்மிளா... மோதிரத்தை உருவிக்கொண்டு விட்ட தொண்டர்கள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, March 31, 2019

பிரசாரத்தின் போது கைகுலுக்கிய சர்மிளா... மோதிரத்தை உருவிக்கொண்டு விட்ட தொண்டர்கள்!

மக்களவை தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டபோது ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரிக்கு கைகொடுப்பது போல மர்ம நபர் மோதிரத்தை திருடியுள்ளார்.

விரைவில் நடைபெற உள்ள மக்களை மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குசேகரிப்பில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திராவில் ஏப்ரல் 11-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி சர்மிளா, தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து குண்டூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார்.

பிரச்சாரம் முடியவிருந்த சமயத்தில் பேருந்தில் இருந்தபடியே தன்னுடைய கட்சி தொண்டர்களுக்கு கைகொடுத்து கொண்டிருந்தார்.

இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர், அவருடைய கையில் இருந்த மோதிரத்தை உருவி சென்றுள்ளார்.

இந்த வீடியோ காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.