தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய கோவையை சேர்ந்த 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் சந்தோஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் நடைபெற்ற அன்று நடந்தது என்ன என்பது குறித்து பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சந்தோஷ்குமார் அளித்துள்ள வாக்குமூலம் பின்வருமாறு,
கடந்த மாதம் 25 ஆம் திகதி சிறுமி அவரது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது வீட்டுக்கு வரும்படி அழைத்தேன். ஆனால் சிறுமி அங்கிருந்து ஓடிச்சென்றபோது அவளை விரட்டிபிடித்தேன்.
கீழே விழுந்ததில் சிறுமிக்கு காயம் ஏற்பட்டதையடுத்து எனது வீட்டுக்கு தூக்கிசென்றேன். இதனை அருகில் இருப்பவர்கள் யாரும் கவனிக்கவில்லை. இதன்போது படுத்த படுக்கையில் இருந்த எனது பாட்டி இறக்கும் தருவாயில் இருந்தார்.
எனது வீட்டின் உள் அறைக்குள் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தேன், இதன்போது சிறுமி சத்தம்போட்டதால் தலையில் அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்தேன்.
இதற்கிடையில்தான் எனது பாட்டி இறந்துவிட்டார். இதனால் சிறுமியின் உடலை வீட்டுக்குள் மறைத்துவைத்துவிட்டேன். எனது பாட்டியின் இறப்புக்கு உறவினர்கள் வந்த காரணத்தால், சிறுமியின் பெற்றோர் எங்கள் வீட்டை கண்டுகொள்ளவில்லை.
எனது பாட்டியின் இறுதி சடங்கு முடிந்தவுடன் சிறுமியின் உடலை வெளியே தூக்கிவீசிவிட்டு தப்பித்துவிட்டேன் னன கூறியுள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷ்குமாரை ஏப்ரல் 15 ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் பொலிசாருக்கு இருந்த ஒரே துருப்பு சீட்டு சிறுமியின் உடலை சுற்றி இருந்த டி-ஷர்ட். அதனை வைத்துதான் பொலிசார் நடத்திய விசாரணையில் அந்த டி - ஷர்ட்டுக்கு சொந்தமான சந்தோஷ்குமார் சிக்கியுள்ளான்.