நுண்கடன் தொல்லையால் அதிக மாத்திரை உட்கொண்டு குடும்ப பெண் தற்கொலை - Kathiravan - கதிரவன்

Breaking

Thursday, March 28, 2019

நுண்கடன் தொல்லையால் அதிக மாத்திரை உட்கொண்டு குடும்ப பெண் தற்கொலை

நுண்நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுக்கொண்டு அதனை திருப்பிச் செலுத்த முடியாமல் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் அதிக மாத்திரை வில்லைகளை உட்கொண்டு நேற்று உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று வவுனியா வேப்பங்குளத்தில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் கடந்த 5ஆம் திகதி நுண்கடன் நிறுவனங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் தொகையைச் செலுத்த முடியாத காரணத்தினால் அளவிற்கு அதிகமான மாத்திரை வில்லைகளை உட்கொண்ட நாகராசா பரமேஸ்வரி 45வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் அளவிற்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டதால் பக்கவிளைவினை எதிர்கொண்ட குறித்த பெண்மணி தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளார்.

தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் எவ்வித முன்னேற்றம் ஏற்படவில்லை என்று தெரிவித்து கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் வைத்தியசாலையிலிருந்து வீடு செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று குறித்த பெண்மணி தனது வீட்டில் உரிழந்துள்ளார். இன்றைய தினம் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றுள்ளது.