கிளிநொச்சி மாவட்டத்தில் கிராமங்களுக்குள் நுழைந்து வீட்டு உபகரணங்களை மலிவான விலையிலும் இலகு தவணையிலும் விலைக்கழிவுடனும் தருவதாக கூறி ஏமாற்றும் கும்பல் ஒன்று நடமாடுவதாக பொலிஸாா் எச்சாித்துள்ளனா்.
இந்த மோடி கும்பலின் பேச்சை நம்பி அண்மையில் முற்பணம் செலுத்திய குடும்பம் ஒன்று இறுதியில் முற்பணமும் இல்லாமல் பொருளும் இல்லாம் ஏமாற்றப்பட்ட சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.
குறித்த குடும்பத்தினா் முற்பணம் செலுத்தியவருக்கு தொலைபேசியில் அழைப்பு எடுத்த நிலையில், எந்த பயனும் கிடைக்கவில்லை. இதனைய டுத்து ஏமாற்றப்பட்ட குடும்பம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையில், இவ்வாறான மோசடி கும்பல்கள்
தொடா்பில் விழிப்புடன் இருக்குமாறு இவ்வாறானவா்கள் உங்கள் ஊருக்குள்ளும் நுழைந்தால் உடனடியாக கிராமசேவகா் அல்லது பொலிஸாருக்கு தகவல் கொடுக்குமாறு பொலிஸாா் கேட்டிருக்கின்றனா்.