இளம் வயதிலேயே சமூக சிந்தனை கொண்டவர்களாக விளங்குவோர் ஒரு சிலரே. அத்தகையோருள் ஒருவர் ஐங்கரன் கதிர்காமநாதன். கனடாவில் வாழும் புலம்பெயர் ஈழத் தமிழரான அவர், புலம்பெயர் நாடுகளில் வாழும் எம்மவர்கள் தமிழகக் கலைஞர்களுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை, மரியாதையை எம்மவர்களுக்கு வழங்குவதில்லை என்ற உண்மையைக் கண்ணாரக் கண்டு, அதன் விளைவால் உருவாக்கிய அமைப்பே படைப்பாளிகள் உலகம்.
தமிழ் கூறும் நல்லுலகு எங்கும் பரந்து வாழும் படைப்பாளிகளுக்கு, அவர்தம் படைப்புக்களை பிரசுரிக்க உதவி, அதற்கூடாக அவர்களின் ஆற்றல்களை சமூகத்தில் வெளிப்படுத்தி, அவர்களுக்கு ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுப்பதே படைப்பாளிகள் உலகின் நோக்கம். அதற்காண பயணம் தொடர்பான அவரின் கருத்துக்களை கதிரவன் உலா நேயர்களோடு அவர் பகிர்ந்து கொள்கிறார்.