கார்த்திகையின் மைந்தனுக்கு அகவை வாழ்த்து….
கார்காலக் கார்த்திகையில்
காரிருளில் ஒளியேற்றக்
கரிகாலன் பிறந்தனனே
கார்த்திகையும் மலர்ந்தாளே…
புவியெங்கும் தமிழ் வாழ
புயல் வேகத் திரை விலக
இயற்றமிழின் உருவாக
கரிகாலன் பிறந்தானே…
வல்வை மண் பெற்றெடுத்த
வல்லவனாம் எம் தலைவன்
வீரத்தின் திருமகனாய்
விடி வெள்ளி எனப் பிறந்தான்…
வேலுப்பிள்ளை ஐயா பெற்ற பிள்ளை
தமிழர் வேதனை தீர்க்க வந்த பிள்ளை
அன்னைத்தமிழை அண்ணைத்தமிழாய்
அகிலம் சுவாசிக்க வைத்த மைந்தன்…
காற்றும் மழையும் பூவும் புயலும்
யாவும் கூறும் அண்ணன் அன்பை
அணி வகுத்த படைகளெல்லம்
இவன் பின்னே.. இவன் தமிழ் முன்னே…
அகவை உயர்வின் நன்னாளில்
அன்பைப் பொழிந்து வாழ்த்திடுவோம்
அல்லல் தீர்க்க வந்த ஆலவிருட்சம்
காவல் காத்து நின்ற கரிகாலன் வாழியவே..
இயற்கையின் நண்பனாம்
இயல்பிலே அன்பு உள்ளவனாம்
இரக்க சிந்தை நிறைந்தவனாம் எம்
தேசத்தலைவனுக்கு அகவை வாழ்த்துகள்…
சிவதர்சினி ராகவன்