எழுந்துவிடு மனமே மாவீரர் நாளில்… - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, March 18, 2019

எழுந்துவிடு மனமே மாவீரர் நாளில்…

ஒவ்வொரு தமிழரும் சொல்கின்றார்கள்
தமிழரின்ன் தாகம் தமிழீழத் தாயகம் -என்று
ஒவ்வொரு போராட்டக் களங்களும்
வெறும் போராட்டகளங்கள் அல்ல
நெஞ்சில் எரியும் காயங்கள்
சுதந்திர நெருப்பு ஆகும்
ஒவ்வொரு களமுனையும் சொல்லுமே
தமிழ் வீரM என்றாள் என்னவென்று
போராடினால் நாளை சுதந்திர தேசமே
நம்பிக்கை என்பது
நம் எல்லோருக்கும் வேண்டும்
நமது வீர தியாகங்களை நிச்சயம்
நாளைய உலகம் சொல்லும்
போரட்டம் வெல்லும் ஒரு நாளில்
ஒவ்வொரு தமிழினமும் சொல்லும்
தமிழரின் தாயகம் தமிழீழம் என்று….
ஒ…மனமே…..ஒ…மனமே..கலங்காதே
துன்பத்தை மறந்து விடு
கடும் போரோ…இழப்பு என்றெண்ணி-உன்
உள்ளம் எப்பொழுதும் உடைந்து விடக்கூடாது
வீர் தேசம் மலர்ந்தால்
மக்கள் நெஞ்சுக்குள் இருக்கும்
காயங்கள் எல்லாம் மறைந்து போகும்
மாயங்களையும் வலியையும்
தாங்கும் உள்ளம் தானே
மண்மீதான விடுதலையைக் காணும்
யாருக்கில்லை போரட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
எல்லோரும் கனவு கண்டோம்
அது ஒரு நாள் நிஜமாகும்
எல்லோரும் சுதந்திர தேசத்தை நேசிப்போம்
விடுதலை மூச்சென்ற – ஒன்றை
மட்டும் சுவாசிப்போம்
லட்சம் கண்கலோடும்
உதிரத்தில் உறைந்த
லட்சிய நெஞ்சுகலோடும்
லட்சியக் கனவுகலோடும்
உறுதியோடு போரடுவோம்
எங்களை வெல்ல யாருமில்லை
உங்கள் மனதை கீறி விதை போடுங்கள்
அவமானங்களும்,படு தோல்விகளும்
எல்லாமே உரமாகும்
உங்கள் வீரம் மரமாகும்
உனக்கான முடிவிருந்தால்
அதில் தெளிவிருக்கும்….
வெற்றியிருக்கும்…….மனமே போரடு…..போரடு !
நன்றி
பவானி மூர்த்தி