பௌத்த மத தர்மத்திற்கு முரணாக செயற்படும் சிங்கள் கட்சிகள் – வண. விளச்சிய தம்ம விஜய தேரோ (செவ்வி, படங்கள் இணைப்பு) - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, March 23, 2019

பௌத்த மத தர்மத்திற்கு முரணாக செயற்படும் சிங்கள் கட்சிகள் – வண. விளச்சிய தம்ம விஜய தேரோ (செவ்வி, படங்கள் இணைப்பு)


வைகாசி விசாகம் பௌத்தர்களின் புனித நாள். இளவரசர் சித்தாத்தர் பிறந்ததும், அவர் கௌதம புத்தராக ஞானம் பெற்றதும், பரிநிர்வாணம் அடைந்ததும் அன்றைய தினத்தில்தான். உலகெங்கும் வாழும் பௌத்த மக்கள் குறிப்பாக சிறி லங்காவில் வாழும் பௌத்தர்கள் அன்றைய தினத்தை ‘வெசாக்” என்ற பெயருடன் மிகச் சிறப்பாக அனுட்டித்து வருகின்றார்கள்.
சுவிஸ் நாட்டில் பேரண் மாநகரில் அமைந்துள்ள சர்வமத பீடத்தில் உள்ள பௌத்த விகாரையில் நடைபெற்ற வெசாக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த இத்தாலி நாட்டின் மெஸ்ஸினா நகரில் உள்ள பௌத்த விகாரையின் விகாராதிபதி வண. விளச்சிய தம்ம விஜய பிக்கு கதிரவன் உலாவிற்காக வழங்கிய சிறப்புச் செவ்வி.
இலங்கையில் உள்ள இன முரண்பாட்டிற்கு இரு இனங்களுக்கும் இடையே உள்ள மொழிப் பிரச்சனையும் ஒரு  கராணம். இந்தச் செவ்வியில் பௌத்த பிக்கு ஒருவர் தமிழ் மொழியில் உரையாடுவதைக் காணலாம்.