இலங்கைத் தமிழர்கள் மத்தியில் உள்ள எரியும் பிரச்சினைகளுள் ஒன்று அரசியல் கைதிகள் விவகாரம். யுத்தம் முடிவடைந்து விட்டது என அறிவிக்கப்பட்டு 6 வருடங்களாகியும் தீர்க்கப்படாது உள்ள விவகாரங்களுள் இதுவும் ஒன்று. இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் மீது மாத்திரமன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன.
இதேவேளை, சிரேஷ்ட சட்டத்தரணியும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவருமான கே.வி. தவராஜா கைதிகளின் விடுதலை தொடர்பாக நீதிமன்றங்களிலே ஆஜராகி வாதாடி வருகிறார்.
தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு சுவிஸ் நாட்டிற்கு வருகைதந்த அவர் கதிரவன் உலாவிற்காக வழங்கிய பிரத்தியேக செவ்வி இங்கே தரப்படுகின்றது. அரசியல் கைதிகள் விவகாரம் உட்பட இலங்கையின் இன்றைய அரசியல் நிலவரம் வரை பல கேள்விகளுக்கு அவர் அளிக்கும் பதில்கள் இங்கே.