உமக்காய் யாது செய்தோம்……! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, March 18, 2019

உமக்காய் யாது செய்தோம்……!

ஆண்டாண்டு காலம் ஆண்ட இனம்
அடிமையாகி போதல் என்ன குணம்
அப்பன் ஆச்சி வாழ்ந்த தேசம்
அடுத்தவர் கூச்சலுக்கு விட்டு ஓடுவது நாசம்
எடுத்தான் போர்வீரன் ஆயுதபலம்
தொடுத்த போரில் தெரிந்தது மனோபலம்
எத்தனை வெற்றி குவித்து நின்றான்
எண்ணியே முடித்திட முழி பிதுங்கி நின்றோம்
ஆயிரம் ஆயிரம் உயிர்கள் சேர்ந்து
அக்கினி யாகத்தை தான் வளர்த்தார்
உயிர் குருதியை பாய்ச்சி நின்றார்
தாய் தேசம் தழைத்திட பாடுபட்டார்
காற்றில் ஆடுக தேசக்கொடி
வானம் தொட்டே தானுயர்க
அதற்காய் ஆவி தாமே தந்த
ஆதி மூலரை போற்றும் மாவீரர் நாளே
காந்தள் மலர் உங்களுக்கே
கருவண்ண மேகமும் உங்களுக்கே
கருவறை உற்சவம் உங்களுக்கே
கார்த்திகை தீபத்தை ஏற்றி வைத்தோம்
– அபிராமி –