மாவீரர் நினைவுக்கவி… - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, March 18, 2019

மாவீரர் நினைவுக்கவி…


மறத்தமிழும் மங்காப்புகழும் மண்ணிற் காவியமான
எம்மாவீரரே உம்மைச்சாருமே
மனிதத்தின் மணிச்சிகரங்கள் மாவீரர் நீங்கள்
மார்பிலே குண்டேந்தி மரணித்த மனிதத்தெய்வங்கள்
நூறாண்டு காலங்கள் நுகர்ந்த மண்ணின் வாசம்
வேரோடு வெட்ட நினைத்தவனை வென்றுவந்தவரே
நீர் செய்த தியாகம் தீராத சரித்திர யாகம் அன்றோ
பாகம் கேட்டு பைந்தமிழ் மண் கேட்க மின்னலாய் சென்றவரே
மனம் கொதிக்கிறதே உங்கள் மலரடி சென்று வணங்க
மாவீரரே உங்கள் மணிக்குரல் எப்போ கேட்போம்
ஊர்சென்று வந்தேன் உங்கள் திருமுகங்கள் பார்த்தேன்
யார் என்று கேட்டேன் உங்கள் சோதரர் என்றீர்கள்
பெயர் என்ன சொல்லவில்லை பெருமையோடு தமிழர் என்றீர்
மலர் இன்று வைத்து உம் கல்லறை வணங்குகிறேன்
வீரச்சாவினால் விதையாகிப்போனவரே விழி கலங்குதையா
விண் மீனாய் நீரிருக்க விழி நீரால் நீரூற்றி
விதைகளான உங்களை விருட்சங்களாக்கி
விரைந்து வீசும் காற்று உம் சுவாசமென்றே வாழ்ந்திடுவோம்
நீர் சுமந்த கனவுகள் என்றும் வீணாகாது எம் வீரரே
கண்டத்தில் நீர் சுமந்த மாலை நிட்சயம் கார்த்திகைப்பூவாகும்
கணமும் உமை எண்ணி கருகுதே தமிழினம்
கடைசிவரை நம்புவோம் நிச்சயம் பிறக்கும் தமிழீழம்
–  கவி -சுகன்யா குமரன் –