அம்பாறை மாவட்டத்தின் முதுபெரும் அரசியல் குடும்பமான அறப் போரணி அரியநாயகம் குடும்பத்தில் இருந்து புதிதாக அரசியலுக்கு வந்தவர் கவீந்திரன் கோடீஸ்வரன் (றொபின்). வணிக முகாமைத்துவப் பட்டதாரியான அவர் தான் போட்டியிட்ட முதலாவது தேர்தலிலேயே வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கி வருகின்றார்.
தான் பிறந்த மண்ணையும், மக்களையும் வெகுவாக நேசிக்கும் அவர், அம்பாறை மாவட்டத்தில்; தமிழ் மக்களின் இருப்பு தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு இலக்காகுவதைத் தடுத்து நிறுத்த புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவை நாடி நிற்கின்றார். தான் சார்ந்த தமிழீழ விடுதலை இயக்கத்தின் கட்சிப் பணிகளுக்காக சுவிஸ் நாட்டிற்கு வருகை தந்த அவர் கதிரவன் உலாவிற்காக வழங்கிய சிறப்பு நேர்காணல்.