வித்தகரே உம்பணிக்கு விலை மதிப்புண்டோ…… - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, March 18, 2019

வித்தகரே உம்பணிக்கு விலை மதிப்புண்டோ……

எம்மண்ணுக்காய் ஆகுதியாகி தமிழினத்தின் உள்ளக்கோவிலில்
வாழும் மாவீரரே உங்கள் தியாகம் தனை திரும்பிக்கூட பார்க்கமுடியாது
எனினும் சிறுமி நிறைவிற்காய் உம் நினைவாக ஒரு சிறு கவி….
ஆசையோடு உன் அன்னை கருவறையில் சுமந்தாள்
தாய் மண்ணில் அன்போடு தவழ விட்டாள்
அன்னையின் பால் தமிழுணர்வாய் நிறைந்ததோ
தமிழ் மண் காப்பது தலையாய கடமை என உணர்ந்தீரோ
அழகான உடையணிந்து ஆனந்தமான பள்ளிப்பருவம்
அவையெல்லாம் உதறியெறிந்து வரியுடையணிந்த உருவம்
சுயநலமின்றி தாய் மண் மீட்புக்காய் கனவுகள் சுமந்து
சுதந்திரம் வேண்டி தந்தைதாய் சுகம் மறந்தீரோ
வித்தகரே உம்பணிக்கு விலை மதிப்புண்டோ
அகத்தில் தமிழீழம் மலரும் என்ற நினைவுகளோடும்
புறத்தில் அன்னை மண் மீட்கும் வெறியோடும்
உணர்வில் தலைவன் வழி என்ற துணிவோடும் சென்றீரோ
பெற்றவர் தேடுகிறார் உற்றோர் உளறுகிறார்
கொட்டும் மழையிலும் வெட்ட வெயிலிலும் வேங்கையாகி
வெறி பிடித்த எதிரியுடன் களமாடிக்கதை முடித்தாய்
காண்போமோ உங்களை காலடி தொழுவோமோ
அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும்
நீங்கள் தெய்வங்கள் அண்ணா அக்காமாரே
பலபடை கொண்டு களமாடியவர்கள் கனகாலமில்லை
மீண்டும் எழுந்து வருவீர்கள் தமிழீழம் மலரும் அன்று
– கவி-புபிகா சுந்தரலிங்கம் –