இருக்க வேண்டியவர்கள் இருந்திருந்தால் இவ்வாறு நடக்குமா—?? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, March 14, 2019

இருக்க வேண்டியவர்கள் இருந்திருந்தால் இவ்வாறு நடக்குமா—??கழிப்பறையில் பிறந்தவர்கள்
உன்னை கற்பழித்த காடையார்கள்

வெடிகுண்டு மழையில் நனைந்த நீயோ
கடிநாய்களின் கையில் கைக் குழந்தையானாய்
பள்ளிக்கு சென்ற நீயோ
படுபாவிகள் கையில் கசங்கிய முல்லையானாய்
தொல்லை அகன்ற வாழ்வை புதைதைத்தவர்கள் நாம்
வெள்ளைநிற ஆடைஎன்று வேட்டைநாய்களுக்கு விளங்கிடுமா?
பிஞ்சுக் குழைந்தை நீ யென
பஞ்சப்பரதேசிகளுக்கு புரியலையே
தங்கத்தமிழ் குழந்தையே தயங்காது சென்றிடு
எங்கள் குலம் இப்படியே அழிந்திடும்
மேய்ச்சல் மாடுகளுக்கு இருக்கும் துணிச்சல்
பாராண்ட தமிழனுக்கு இன்றில்லை
செத்துப்போனது நீதி
சொத்துள்ளவன் பக்கமே நீதி
என்ன பாவம் செய்தததைய்யா எங்கள் குலம்
சோதனைகளோடு வெம்பி வாழ்கின்றோமைய்யா
பாதுகாப்பை இழந்துவிட்டோம்
பாவாடைராயர்களுக்கு வேட்டை
அட்டூழியக்காரானுக்கும் ,அடுத்தவனுக்கும்
இரையாகிப்போகுமா? எம்மினம்
இதைக்கண்டு இயல்பாக இருக்குமா? எம்மனம்
இந்த நாசம் பெரும் சேதத்தை தரும்
உன்னை பலி தீர்த்தவர்கள் விழியின்றிப்போவார்கள்
வாழ வழியின்றி அலைவார்கள்
அள்ளிநீர் பருக கரமின்றி காமுகன் திரிவான்
கொள்ளிவைக்க யாருமின்றி
படுக்கையில் மலம் போய்க்கிடப்பான்
உன் கன்னங்களால் வழிந்த நீருக்கு
கையாலாகாத நாம்
வஞ்சத்தை வார்த்தையால்
கொட்டிவிடவே முடிந்தது
இறைவனை இறைஞ்சி வேண்டுவோம்
இன்னுமொரு இழிநிலை வராதிருக்க……


வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.