தங்கை வித்தியாவே நீ மரணித்தது ! மரணம் அல்ல ஜனனம்….. - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, March 14, 2019

தங்கை வித்தியாவே நீ மரணித்தது ! மரணம் அல்ல ஜனனம்…..


பூஜைக்கென்று பூத்த மலர்
புயலடித்து சாய்ந்ததம்மா!
கண்ணியிலே கால் இடறி
கன்னிமயில் வீழ்ந்ததம்மா!
செம்புழுதிக் காற்றே சொல்லு
புங்கை நகர் தேவதை எங்கே!
பள்ளிக்குப் போன எங்கள்
பருவநிலா தொலைந்த தெங்கே!
வன்கொடுமைத் தீயில் வீழ்ந்து
வதைப்பட்ட போது நெஞ்சில்
என்ன நினைத்தாளோ!
ஐயோ!…..
பெண்பிறப்பே கொடியதென்று
சொல்ல நினைத்தளோ!
வெறி புடிச்ச நாய் கடிச்சா
யாரை தப்பு சொல்வது
வெறிநாயை விட்டுவைச்ச
சமூகத் தப்பு அல்லவா!
மாநிலத்தில் தமிழ் ஆட்சி
வெறும் காட்சி மாற்றம்தான்
கண்ணகி சிலை மறைப்பில்
காம வெறி ஆட்டம்தான்!


கண்ணா!……கண்ணா!….என்று
கத்தினாள் பாஞ்சாலி
அண்ணா!…….அண்ணா!……என்று
அலறித் துடித்தாயோ!
கண்ணகை அம்மனவள்
கண்ணிழந்து நின்றாளோ!
செல்லமே உன் மரணம்
மரணம் இல்லை ஜனனம்
பெண்ணியப் புரட்சி என்னும்
சூறைக்காற்றின் ஜனனம்.