வரலாற்றுக்கு முன்பே அறிவியலின் விளிம்பில் தமிழன்.. - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, March 20, 2019

வரலாற்றுக்கு முன்பே அறிவியலின் விளிம்பில் தமிழன்..


தமிழர்களின் இலக்கியங்களும்,சில அறிவியல் கோட்பாடுகளும் இன்றளவும் உலக விஞ்ஞானிகளால் அதிசயத்து பார்க்ககூடிய ஒன்று. அவனது ஒவ்வொரு கணிப்புகளும் ஒருபோதும் பொய்யானது இல்லை, மற்ற மனித இனங்கள் மிருகங்களை வேட்டையாடியும்,இறைவனுக்கு மனித நரபலி வழங்கி வாழ்ந்த வந்த நிலையில் தனக்கான சில கடமைகளுடன் அறிவியலின் விளிம்பில் காணப்பட்டான் தமிழன்.
புறநானூறு மிக முக்கியமான இலக்கிய படைப்புக்களில் ஒன்று, இதில் உறையூர் முதுகண்ணன் என்ற புலவன் அன்றே தமிழர்கள் சூரியனின் அறிவியல் ஆராய்ச்சிகளிலும் சிறந்திருந்தனர் என்பதை தெளிவுபடுத்துகின்றது.
“செஞ் ஞாயிற்றுச் செலவும்
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும்
என்றிவை
சென்று அளந்து அறிந்தார் போல
“என்றும் இனைத்து என்போரும் உளரே”
பொருள்
சூரியன் ஒரு பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அது இவ்வளவு கால எல்லையில் இந்தளவு தூரத்தைக் கடக்கும். அதனால் அதன் வேகத்தைக் கணிக்க கூடிதாக இருக்கின்றது. அது செல்லும் வான் மண்டலத்தில் ஒரு எல்லை வரை காற்றின் திசை இப்படி இருக்கும். ஈர்ப்புச் சக்தியும் அங்கு உண்டு. அதற்கு மேலே காற்றே இல்லாத அண்ட வெளியும் இருக்கின்றது. அதிலே ஈர்ப்பு விசையும் இல்லை. இவையாவற்றையும் நேரில் போய்ப்பார்த்து ஆராய்ந்து அறிந்த வானியல் அறிஞர்களும் நம்மிடையே இருக்கின்றார்கள்.
இது ஒர் உண்மையான கருத்து என்றால் அவன் எவ்வாறு சென்று ஆராய்ச்சி செய்திருப்பான் என்ற ஐயம் உங்கள் மனதில் எழலாம்.ஆனால் அற்த ஆராய்சியை எவ்வாறு மேற்கொண்டான் என்பதை பற்றியும் பாடியிருந்தால் அது ஆச்சிரியமே,
“புலவர் பாடும் புகழுடையோர் விசும்பில்
வலவன் ஏவா வான ஊர்தி எய்துப”
பொருள்
விண்ணில் விமானி இருந்து இயக்காத விமானம்
இவ்வாறான ஒர் விமானம் இருந்ததா? இல்லையா? என்பது வேறு விடயம். இப்படி ஒரு கணிப்பு விமானப் பிறப்புக்கு அடித்தளம் இட்ட ரைட் சகோதராகள் பிறப்பதற்கு முன்பே புறநானூற்றில் இடம்பெற்று விட்டது என்பது தான் நாம் எண்ணிப்பார்க்க வேண்டிய ஓர் விடயமாகும்.
விமானி இல்லாத விமானங்கள் என்று பிரித்துக் காட்டியதால் அதற்கு முதல் நிச்சயமாக விமானிகள் செலுத்தும் விமானங்கள் இருந்திருத்தல் வேண்டும்.
அடுத்தது கம்பராமாயணம்
“மண்ணின் மேல்அவன் தேர்சென்ற சுவடு எல்லாம் ஆய்ந்து
விண்ணில் ஓங்கிய ஒருநிலை மெய்யுற வெந்த
புண்ணில் ஊடுஒரு வெல்என மனம்மிகப் புழுங்கி
எண்ணி நாம்இனிச் செய்வது என்ன இளவலே என்றான்.”
விமானங்கள் ஓடுபாதையில் ஓடி வேகம் எடுத்து புவியீற்பை முறித்த பின்தான் மேலே எழ முடியும் என்ற விஞ்ஞான விளக்கம் சோழர் காலத்துக் கவிஞனான கம்பனுக்கு எப்படித் தெரிந்து இருந்தது. விமானப் பறப்பை நேரில் கண்டானா? இல்லை அது தொடர்பான ஏடுகள் அந்த அறிவை வழங்கினவா? தாடியும் சடாமுடியும் கொண்டதாகச் சித்தரிக்கப்படும் சங்கப் புலவர் கூட்டத்தில் விமானங்களை வடிவமைக்கும் திறன் தெரிந்த பொறியியலாளரும் இருந்தார்களா என்பதெல்லாம் ஆய்வுக்கு உரிய விடயங்கள்.


இப்படியான வானியல் அறிவுக்கு கணக்கிலும் பௌதீகவியல் மற்றும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக இருந்திருக்க வேண்டும் என்பது உண்மைதானே!