அமெரிக்காவின் மிக முக்கியமான அரசியல் தலைவர்களின் பட்டியலில் கட்டாயம் உள்ளடக்கப்படும் இரு பெயர்கள் தான் ஆபிரகாம் லிங்கன் மற்றும் ஜான் எப். கெனடி இவர்களின் வாழ்வியல் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்கமுடியாது.
அவ்வாறான இரு தலைவர்களின் வாழ்வில் சில தனித்துவமான மர்மங்கள் இருவருக்கும் ஒத்துபோகின்றது என்றால் அது சற்றே சிந்தனைக்குரிய விடயம் தான்
ஆபிரகாம் லிங்கன் US காங்கிரசுக்கு 1846ம் ஆண்டும் ஜான் எப்.கெனடி US காங்கிரசுக்கு 1946ம் வருடமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்
லிங்கனின் காரியதரிசியின் (Secretary)பெயர் கெனடி என்பதோடு கெனடியின் காரியதரிசியின் பெயர் லிங்கன் என அமைந்திருந்தது.
லிங்கன் கெனடி இருவருமே கொலைகள் மூலம் தான் மரணித்தனர்.இதில் லிங்கனை கொலை செய்த “ஜான் வில்கெஸ் பூத்” 1839 வருடத்தில் பிறந்திருந்தான் மற்றும் கெனடியை கொலை செய்த “லீ ஹார்வே ஆஸ்வால்ட்” 1939 ம் வருடத்தில் பிறந்திருந்தான்.
லிங்கன் அமெரிக்காவின் குடியரசு தலைவராக 1860ம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்தோடு கெனடி அமெரிக்காவின் குடியரசு தலைவராக 1960ம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
லிங்கன் “போர்ட்” என அழைக்கப்பட்ட தியேட்டரின் முன் சுடப்பட்டார் அதே போல் கெனடி “போர்ட்” கம்பனியின் லிங்கன் என்ற காரில் செல்லும்போது சுடப்பட்டார்.
இவர்கள் இருவரும் மனித உரிமைக்காக குரல் கொடுத்தவர்கள்.
லிங்கன் மற்றும் கெனடி இவர்களது மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வசிக்கும் போது தான் தங்களது குழந்தைகளை இழந்தனர்
இவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமையில் தான் தலைகளில் சுடப்பட்டு இறந்தனர்.
வரலாற்றின் மிகமுக்கியமான இரு தலைவர்களின் வாழ்விலும் அவர்களது மரணத்திலும் இவ்வளவு மர்மம் நிறைந்திருக்கின்றது என்றால் அது ஆச்சிரியம் தான். இவை அனைத்தும் இந்த உலகத்தையே தனது கட்டுபாட்டின் கீழ் வைத்திருக்கும் ஒரு சில தந்திரிகளால் மட்டுமே நிகழ்த்தபட்டிருக்கும் எனவும் நம்மை யுகிக்கதோன்றகின்றது.