உலகிலேயே மூத்த மொழி தமிழ்;மூத்த குடி தமிழன் ஆதாரம் இதோ! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, March 19, 2019

உலகிலேயே மூத்த மொழி தமிழ்;மூத்த குடி தமிழன் ஆதாரம் இதோ!

பிலேடியன் என்னும் அயல்கிரக வாசிகள் உலகத்தோடு பல காலமாக தொடர்பில உள்ளனர் என்று அமெரிக்கர்கள் சிலர் நம்புகின்றனர்.
மொழி, வரலாறு ஆகியவற்றை உலகிற்கு அறியப்படுத்தியது இந்த பிலேடியன்கள் தான் என்று உறுதியாகக் கூறுகின்றனர் இந்த அமெரிக்கர்கள்.
இந்த குழுவில் உள்ளவர்கள் நூல்கள் படிப்தில்லை. ஆனால் பிலேடியன்கள் உதவியுடன் பல தகவல்கள் அறியத் தந்துள்ளனர்.
அந்த வகையில் 1995 ஆம் ஆண்டு இந்த ப்லேடியன்களோடு தொடர்பு உள்ள பேராசிரியர் அலெக்சு காலியர் தனது குழுவிற்கு பாடம் நடத்துகையில் திடீரென்று உலகின் மொழிகளைப் பற்றி பாடம் நடத்தினார்.
அப்போது அவர் உலகின் முதலில் பேசப்பட்ட மொழி தமிழ் மொழி தான் எனக் கூறியுள்ளார்.
பின்பு தான் பிலேடியன்கள் உதவியுடன் பல மொழிகள் பல்வேறு நாடுகளுக்குப் பரப்பட்டது என்று பிலேடியன்கள் சொல்வதாக இவர் சொல்கிறார்.
உலக மொழிகளில் மூத்த முதல்மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும்என்று ஆகக் கடைசியாக மொழியியல் அறிஞர் நோவாம் சோம்சுகி அறிவித்துள்ளார்.
நோவாம் சோம்சுகியின் கருத்தை அவருக்கு முன்னாலேயே மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் உறுதிபட நிறுவியுள்ளார்.
ஆதாரங்களின் இதோ,
மாந்தன் பிறந்தகமாகிய குமரிக்கண்டத்தில் தமிழ் தோன்றி இருத்தல்.
இப்போது இருக்கும் மொழிகளுள் தமிழ் மிகப் பழைமையானதாக இருத்தல்.
தமிழ் இயற்கையான சொல்வளர்ச்சி கொண்டதாக இருத்தல். (செயற்கையான சொல்வளர்ச்சி இல்லை)
ஆரிய சேமியமொழிச் சொற்கள் பலவற்றின் வேரைத் தமிழ் தன்னகத்தே கொண்டிருத்தல்.பல மொழிகளின் மூவிடப் பதிற்பெயர்கள் தமிழ்ப் பெயர்களைப் பெரிதும் சிறுதும் ஒத்திருத்தல்.
தாய் தந்தையரைக் குறிக்கும் தமிழ் முறைப்பெயர்கள், ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் திரிந்தும் திரியாதும் வழங்கி வருதல்.
சில பல இலக்கண நெறிமுறைகள் தமிழுக்கும் பிற மொழிகளுக்கும் பொதுவாக இருத்தல்.
பிறமொழிகளுக்குச் சிறப்பாகக் கூறப்படும் இயல்களில் மூல நிலைகள் தமிழில் இருத்தல். [எ.கா: ஆரிய மொழிகளின் அசை அழுத்தமும் சிந்திய மொழிகளின் உயிரிசைவு மாற்றமும் அமெரிக்க மொழிகளின் பல்தொகை நிலையும் போன்றன]
இப்படியான, பல்வேறு உறுதியான காரனங்களின் அடிப்படையில் இந்தியா மட்டுமல்ல.. உலகத்திற்கே மூத்தமொழி.. முதல்மொழி தமிழாகத்தான் இருக்க முடியும் என்பது அறிஞர்களின் கருத்து.