மன்னார் மனித புதைகுழி விடயத்தில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மன்னார் மனித புதைகுழி தொடர்பான கார்பன் பரிசோதனை அறிக்கையை ஏற்பதா..? இல்லையா..? என்பது தொடர்பில் நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், தமது கட்சி அடுத்துவரும் இரண்டு வருடங்களில் சர்வதேசத் தரப்பினருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்