நிரந்தரமாக வடக்கில் கால் பதிக்க இராணுவத்தினர் திட்டம் – காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, March 30, 2019

நிரந்தரமாக வடக்கில் கால் பதிக்க இராணுவத்தினர் திட்டம் – காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்!

வரவு – செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை இராணுவத்தினர் அபகரித்த நிலங்களை கொள்வனவு செய்து, அவர்கள் அங்கேயே கால் பதிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டமென காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் லீலாதேவி தெரிவித்துள்ளார்.

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று (சனிக்கிழமை) கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினர் வடக்கு கிழக்கில் அபகரித்த காணிகளில் நிரந்தரமாக கால் பதிப்பதற்காகவே இவ்வாறான திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறான வரவு – செலவு திட்டத்திற்கு தமிழ் தலைமைகள் ஆதரிப்பார்களாகவிருந்தால், அவர்களுக்கு இராணுவம் வேண்டும், சிங்கள அரசாங்கம் வேண்டும் என்பதோடு அதில் அவர்களுக்கும் இலாபம் உண்டு என்பதை பொதுமக்கள் உணர வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்