மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமலகாசனுக்கு கூவிக்கூவி அழைத்தும் கூட்டமே சேராததால் வெறுத்துப் போய் பல இடங்களில் பேசாமலே திரும்புகிறார் என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
புதுப்புது வழிமுறைகளுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்து சினிமா பாணியில் வசனம் பேசி அரசியலில் விறுவிறுவென வந்துவிடலாம் என எதிர்பார்த்தலும் போல . தேர்தலும் வந்து விட தனித்துப் போட்டி என்று அறிவித்தார்.
ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ், நீதிபதி, டாக்டர்கள், தொழில் அதிபர்கள், சினிமா பிரபலங்களை வேட்பாளர்களாக அறிவித்து தேர்தல் களத்தில் குதித்தார்,
என்னினும் தொகுதிவாரியான பிரச்சாரத்துக்காக கட்சியின் சின்னமான மின்கல விளக்கை ஒரு கையில் பிடித்தபடி மறுகையில் ஒலிவாங்கியை பிடித்து பிரச்சாரம் தொடங்கினார்.
முதலில் ஓரளவு கூடடம் கூடியது எனினும் அடுத்தடுத்த
கூட்ட்ங்களிற்கு கமல் வருகிறார்... கமல் வருகிறார் என்று நடுரோட்டில் கட்சித் தொண்டர்கள் 50 பேருக்கும் மேல் தொண்டை கிழிய கத்தியும் சொற்ப அளவிலேயே மக்கள் கூட்டம் கூட, அவர்கள் மத்தியில் கமல் பேசிச் செல்கிறார்.
உண்மையான தேர்தல் அரசியல் களம் இது தான் என்பது பிரச்சாரத்துக்கு கிளம்பிய 2-வது நாளிலேயே உணர்த்திவிட்டதாம்.
காரணம், கையில் காசு, சாராயம் , பிரியாணி என்று கொடுத்தால் மட்டுமே கூட்டம் சேர்க்க முடியும் என்ற நிலைமையை நம் அரசியல்வாதிகள் எப்போதோ ஏற்படுத்தி விட்டார்கள்.
இதனால் நேர்மை, கொள்கைகளையெல்லாம் மக்கள் புறந்தள்ளி விட்டார்கள் என கமல் தன் முக்கிய நிர்வாகிகளுடன் பேசி கவலைப்படடாரம்.