அநுராதபுர சிறைச்சாலையில் தமிழ் சிறைச்சாலை உத்தியோகத்தர் மீது கொடூர தாக்குதல்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, March 30, 2019

அநுராதபுர சிறைச்சாலையில் தமிழ் சிறைச்சாலை உத்தியோகத்தர் மீது கொடூர தாக்குதல்!பொலனறுவை சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் அங்கு கடமையாற்றும் பெரும்பான்மை சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மதுபோதையில் இருந்த பெரும்பான்மையின சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் நான்கு பேர் இணைந்து நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இந்த தாக்குதலை மேற்கொண்டதாக பொலனறுவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, கிரான் பிரதேசத்தினைச் சேர்ந்த பி.பத்மகம்சன் என்னும் சிறைச்சாலை உத்தியோகத்தரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதுடன் அவர் இன்று வாழைச்சேனை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

‘இது எங்கட நாடு இங்கு உங்களுக்கு என்னடா வேலை’ என்று கேட்டுகேட்டு தன்னை தாக்கியதாகவும் தனது மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தியுள்ளதாகவும் காயமடைந்த பத்மகம்சன் தெரிவித்தார்.

பல காலமாக பொலனறுவை சிறைச்சாலையில் கடமையாற்றும் தமிழ் உத்தியோகத்தர்களுக்கு பெரும்பான்மை உத்தியோகத்தர்கள் அச்சுறுத்தல் விடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.