யாழ் நவாலியில் ஆவா குழு காவாலியின் வீடு மீது இனந்தெரியாதோர் தாக்குதல்!! தந்தை, மகன் காயம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, March 30, 2019

யாழ் நவாலியில் ஆவா குழு காவாலியின் வீடு மீது இனந்தெரியாதோர் தாக்குதல்!! தந்தை, மகன் காயம்!

நவாலி அரசடி வீதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல்
தந்தையையும் மகனையும் வாளால் வெட்டிக் காயப்படுத்தியது. அத்துடன்,
வீட்டிலுருந்த பெறுமதியான பொருள்களையும் தாக்கி சேதப்படுத்திவிட்டுத்
தப்பிச் சென்றது என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்றிரவு 10.30 மணியளவில் இடம்பெற்றது.

தாக்குதலில் படுகாயமடைந்த தந்தையும் மகனும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆவா குழுவில் முன்னர் இருந்த கிருஷ்ணா என்ற இளைஞருடைய வீட்டிக்குள்
புகுந்த வன்முறைக் கும்பல் அடாவடியில் ஈடுபட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பலே தாக்குதலை நடத்தியதாகவும் பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்