யாழில் வாள்வெட்டு குழு அட்டூழியம்: வீடொன்றில் பெற்றோல் குண்டு தாக்குதல் - Kathiravan - கதிரவன்

Breaking

Friday, March 29, 2019

யாழில் வாள்வெட்டு குழு அட்டூழியம்: வீடொன்றில் பெற்றோல் குண்டு தாக்குதல்

யாழ்ப்பாணம் - மல்லாகம் பங்களா வீதி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு குழு வீட்டை அடித்து நொருக்கிவிட்டு, வீட்டுக்குள் பெற்றோல் குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வீட்டுக்குள் புகுந்த நபர்கள் வீட்டின் கண்ணாடிகளை அடித்து நொருக்கியுள்ளனர். மேலும் பெற்றோல் குண்டுத்தாக்குதலையும் நடத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் வீட்டின் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளனர்.