இந்த வருடத்தின் முதல் மூன்று மாதக்காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலும், அதற்கு அடுத்தததாக யாழ் மாவட்டத்திலுமே இனங்காணப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் 533 பேரும், கொழும்பின் ஏனைய பகுதிகளில் 2164 பேரும், யாழில் 1580 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கடவுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், வீடுகள், சுற்றுசூழல் மற்றும் பாடசாலை உள்ளிட்;ட பகுதிகளில் டெங்கு நோய் பரவும் வகையிலுள்ள இடங்களை சுத்தம் செய்வது அவசியமானது எனவும் அந்த பிரிவு பொதுமக்களிடம் கோரியுள்ளது.