மின்சார பற்றாக்குறையால் பொதுமக்களுக்கு அமைச்சரவை வெளியிட்டுள்ள செய்தி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, March 27, 2019

மின்சார பற்றாக்குறையால் பொதுமக்களுக்கு அமைச்சரவை வெளியிட்டுள்ள செய்தி

மின்சார பற்றாக்குறைக்கு முகங்கொடுப்பதற்காக பின்பற்ற வேண்டிய சில விடயங்கள் உள்ளிட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்த யோசனைகே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மூன்று மாதக் காலப்பகுதியினுள் அனைத்து வீடுகளிலும், இரண்டு மின் விளக்குகள் அணைக்கப்பட வேண்டும்.

அரச நிறுவனங்கள், சமய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் மின்சாரப் பாவனையை நூற்றுக்கு 10 சதவீதமாக குறைத்தல்.அத்தியாவசியமற்ற மின் விளக்குகளை அணைத்தல்.

சாதாரண தினங்களில் வீதி மின் விளக்குகள் அணைக்கப்படும் நேரத்திற்கு ஒரு மணித்தியாலயத்திற்கு முன்னரே அனைத்து வீதி மின் விளக்குகளையும் அணைத்தல்.உள்ளிட்ட விடயங்கள் இந்த அமைச்சரவை பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, தற்போது பயன்படுத்தப்படும் மின் அலகுகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் மின் உற்பத்தியில் பற்றாக்குறை நிலவுவதாகவும் அந்த பத்திரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, மின்சார உற்பத்தி வழமைக்குத் திரும்பும் வரை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களை அறிவுறுத்த அரசாங்கத்தின் அவதானம் திரும்பியுள்ளதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது