மது அருந்த பணம் தேவையென்பதற்காக, பிறந்து ஐந்து நாளேயான குழந்தையை விற்ற “குடிமகனை“ பொலிசார் கைது செய்துள்ளனர்.
டிக்வெல்லையில் இந்த சம்பவம் நடந்தது.
நபர் ஒருவர் மது அருந்த பணம் இல்லாததால், பிறந்து ஐந்து நாளேயான குழந்தையை தனது மனைவியிமிருந்து பலாத்காரமாக பிரித்து சென்று, பெண்ணொருவரிடம் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.
இது தொடர்பாக குழந்தையின் உறவினர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கினர். இதையடுத்து, ஆசாமியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இவருக்கு ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ளன. ஐந்தாவது குழந்தையையே விற்பனை செய்துள்ளார்.
இவரை மாத்தறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியபோது, 5 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், 2 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல நீதிபதி உத்தரவிட்டார்.