உன்னதபுருஷர்களாம் மாவீரர் நினைவெழுதி…..! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, March 18, 2019

உன்னதபுருஷர்களாம் மாவீரர் நினைவெழுதி…..!

கதிரவனே உன் கதிர்கள் சிந்தி கால்நடை புரிந்து
கணினி எனும் உலகப்பரப்பில் உறவுகளோடு உன்
கரம் கொடுத்து ஊர்வலம் வரும் உமக்கு உளமார்ந்த
நன்றி கூறி உன்னதப்புருசர்களாம் எம் மாவீரர்
நினைவிற்காய் என் சிறு வரி தர வந்துள்ளேன்
படைத்த பிரமனிற்கே பணி நிறுத்தி பைந்தமிழ் காக்க
படையமர்த்தி விதியென்ற சொல்லிற்கு விளக்கமாய்
விண்ணிலும் மண்ணிலும் கடலிலும் கன்னித்தமிழ் காக்க
விழிமூடும் நேரத்தில் விரைந்து சென்று மண் காக்கமரணித்தவரே
அன்னை மடி தவழ்ந்து தந்தையின் அறிவு கேட்டு வளர்ந்து
அதன்பால் தாயின் பால் உணர்வு பொங்க எம்மண்ணுக்காய்
உயிர்கொடுக்க திடம் கொண்டு உதிரம் சிந்திய உத்தமரே
உமை எண்ணி உறவு ஏங்கி கலங்கும் ஒலி கேட்குமோ
என்றே சென்றீரோ என்றே தேடுகிறார் தோழரும் உறவும்
எண்ணம் எதுக்காய் இருந்ததோ எதிரொலிக்க உயிரிழந்தீர்
எம்மண்ணில் வீசும் காற்றிலும் காடுகளிலும் களனிகளிலும்
எம்மாவீரரே என்றோ ஓர் நாள் எம்மண் எமக்காகும்
இளமையின் மஞ்சம் திறந்து மகிழ்ச்சியின் உச்சம் மண்மீட்பென்று
எம்மண்ணும் இனமுமென்றே நெஞ்சை உரமாக்கி
மென்மை பெண்களும் பெரும்புயலாகி கரும்புலிகளாகி
புதுமைப்படை நடத்தி பூமித்தாயின் மடியில் பூவுடல் சாய்த்து
விடியும் ஒரு நாள் மண்ணில் இட்டவிதை விருட்சமாகி
மலரும் ஒருமுறை மனங்களில் வாழும் எம்மாவீரச்செல்வங்களே
நினைவு தான் மாறுமோ மரத்த உள்ளங்களோடு மறுபிறப்பில்
மக்களாய் பிறப்பீர்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம் நம் தமிழீழத்தில்
– கவி-ரமீந்திராணி அருட்செல்வம் –