சுவிற்சர்லாந்தின் ஈழத்தமிழர்களால் அமைக்கப்படும் மிகப் பிரம்மாண்டமான முருகன் ஆலயம்! (நேர்காணல், படங்கள் இணைப்பு) - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, March 23, 2019

சுவிற்சர்லாந்தின் ஈழத்தமிழர்களால் அமைக்கப்படும் மிகப் பிரம்மாண்டமான முருகன் ஆலயம்! (நேர்காணல், படங்கள் இணைப்பு)

ஐரோப்பாவின் உதைபந்தாட்ட மைதானம் என வர்ணிக்கப்படும் சுவிற்சர்லாந்து நாட்டின் சொர்க்க பூமியான பேர்ண் Toffen  பகுதியில் முற்று முழுதாக சொந்த நிலப்பரப்பில் மிகப் பிரமாண்டமான முறையிலே நிர்மாணிக்கப்பட்டு வரும் ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர் ஆலயக் குடமுழுக்கு வைபவம் யூன் 7 ஆம் திகதி மிக விமரிசையாக நடைபெற ஏற்பாடாகி உள்ளது.  பேர்ண் மாநிலத்தில் மலைகள் சூழ்ந்த பெல்ப் – ரொப்பன் நகரில் ஆற்றங்கரையோரமாகவும், நாடாளுமன்றத்திலிருந்து 10 கிலோ மீற்றர்கள் தொலைவிலும் அமையும் இந்த ஆலயம் 4,000 சதுர மீற்றர் பரப்பளவில் சுமார் 50 இலட்சம் சுவிஸ் பிராங்குகள் செலவில் அமைக்கப்பட்டு வருகின்றது.
புலம்பெயர்ந்த போதிலும் தமது அடையாளங்களை முழுமையாகத் தொலைத்துவிட விரும்பாத ஈழத் தமிழர்கள் தாம் வாழும் இடங்களில் எல்லாம் தமது கலாசார அடையாளங்களை அமைத்து வருகின்றனர். அதன் ஒரு அங்கமாக அமைக்கப்பட்டுவரும் வழிபாட்டுத் தலங்களில் சுவிஸ் நாட்டைப் பொறுத்தவரை அதிக பொருட் செலவில் அமையும் இந்து ஆலயமாக இது அமைகிறது.
சிற்பக் கலைக்குப் பேர்போன மாமல்லபுரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஸ்தபதி குபேரன் அவர்களின் தலைமையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்த ஆலயம் தனியே வணக்க நிலையமாக மட்டுமன்றி தமிழர்களின் கலை கலாசார விழுமியங்களை நிலைநாட்டும் ஒரு மையமாக விளங்க வேண்டும் என்பதே இதன் பின்னணியில் உழைப்போரின் விருப்பமாகும்.
தமிழர்கள் என்ன செய்தாலும் சர்ச்சைகள் தவிர்க்க முடியாதவை. அதே போன்று இந்த ஆலய அமைப்பிலும் சர்ச்சைகள் வலம்வரவே செய்கின்றன.
எவ்வாறாயினும் எதிர்கால இளைய சமுதாயம் இவ் ஆலயத்தினை மென்மேலும் கோலோச்ச செய்வது அவசியமாகும். எனினும் இவ் உண்மையை உணர்ந்து இளஞ்சமுதாயம் குறித்த ஆலயத்தின் வளர்ச்சியில் பங்கெடுக்குமா? என்பது தொடர்பில் உங்களது கருத்துக்களை முகநூல் வாயிலாக தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
ஒரு ஊடகத்தின் பார்வையில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் பிரமாண்டமான முயற்சி கவனத்துக்கு உரியது. அதே வேளை சர்ச்சைகளும் புறந் தள்ளப்பட முடியாதவை. இரண்டுக்கும் நடுவில் தகவலை வெளிக்கொணரும் ஒரு முயற்சியில் கதிரவன் உலா ஈடுபட்டதன் விளைவே இந்தக் காணொளி.



New Murugan Bern, SwitzerlandNew Murugan Bern, Switzerland2New Murugan Bern, Switzerland3New Murugan Bern, Switzerland4 New Murugan Bern, Switzerland5
கதிரவன் உலா: : புதிய ஆலயம் சார்ந்து பழைய ஆலயம் இருந்த காலத்தில் பதிவு செய்யப்பட்ட செவ்வி மீள் பதிவு.

பழைய ஆலயத்தில் இறுதியாக இடம்பெற்ற தேர்த்திருவிழாவின் காணொளியை சைவ பக்தர்களாகிய உங்களுக்காக இங்கே மீள் பதிவு செய்கின்றோம்

Gürbestrasse 7-9
3125 Toffen (Bern)Switzerland
“மேன்மைகோள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்”
ஆலயத்திற்கான வரைபடம்