கொலைகாரன் ஜனாதிபதியாவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, March 26, 2019

கொலைகாரன் ஜனாதிபதியாவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை!

வரவு செவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாக வாக்களிக்கும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்தார்.

  
''நாங்கள் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி அரசாங்கத்தை காப்பாற்றி வைத்திருப்பதாக கூறுவது உண்மையே. அதற்கு காரணம் இருக்கின்றது. இப்போது இருக்கின்ற ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கவில்லை என்றால் மஹிந்த ராஜபக்ஷதான் வருவார்.

ஆகவே வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க தவறினால் இந்த அரசாங்கம் கவிழும். அரசாங்கம் கவிழ்ந்தால் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வருவார். நாங்கள் நடுநிலை வகித்தாலும் அவர் வருவார். மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வருவதை எமது மக்கள் விரும்புவார்களா? ஆகவே நாங்கள் வரவு செலுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்போம்.

எங்கள் ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்திற்கும் அதிகமான மக்களை கொலை செய்து இந்த மண்ணிலே பெரிய இனப்படுகொலையை நடத்திய கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வர வேண்டும் என்று நிற்கின்றார். ஜனாதிபதியாக வர வேண்டும் என்ற கனவை கோத்தாபய முதலில் விட வேண்டும். அந்தக் கொலைகாரன் ஜனாதிபதியாக வருவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை“ என்றும் அவர் தெரிவித்தார்.